Saturday, 22 February 2025

நானும் அந்தத் திசை நோக்கியே!

நானும் அந்தத் திசை நோக்கியே!

யாருக்கும் நான் ஒரு மகானாகவோ,மகாத்மாவாகவோ பிறக்கவில்லையே  என்பதும் தன்னுடைய ஏக்கமாகவே இருந்தாலும் தன்னுடைய நோக்கமும் அதுவாகவே இருக்கிறபோதுதான் அவர் அந்நிலையை எட்டமுடிகிறது என்பதே சத்தியம்.ஆகவே நோக்கம் நோக்கி தரிசிப்பதும் அதற்கான பாதை தேடுதல்தான்.அப்படித்தான் மகான்களும்,மகாத்மாக்களும் உருவாகிறார்கள்.பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போது தூய்மையான ஆத்மாவாகத்தான் அவதரிக்கிறான்.பிறக்கும் பிஞ்சின் மனம் பிறக்கும்போது அது ஒரு எழுதப்படாத காகிதம்.அது வளரும் சூழலில்தான் சமூக நிகழ்வுகள் மற்றும் சுய தேடல்கள் மூலம் பெறும் அனுபவங்கள்தான் அறிவுகளாக பதியப்பெறுகின்றது.அதாவது அவன் தன்னைச்சூழ்ந்துள்ள சமூகச்சூழலால் ஒரு குயவனின் எண்ணத்தின் வண்ணத்தில் கைவண்ணத்தின் பயிற்சியின் தீர்கத்தில் வளரும் பாண்டம்
போல் மாண்மை அடைவதும் கீழ்மை அடைவதும் அவன் விதியாகிறது.

ஆகவே ஒரு மனிதனின் ஆக்க மேன்மைக்கு சமூகச்சூழலின் பண்பட்ட அமைப்பும் குடும்பச்சூழலின் ஒழுக்குமுறை வாழ்வியல் பாதுகாப்பும் மிக மிக அவசியமாகிறது.பெற்றோரின் பிள்ளைகள் மீதான பொறுப்பும் கவனமும் கவனிக்கத்தக்கது.எந்த ஒரு சமூகமோ ,சமூகத்தில் ஒரு குடும்பமோ அமைதியும் ஒழுக்கமும் நிறைந்துள்ளதோ அந்த 
ஒரு சமூகமும் அந்த சமூகத்தில் குடும்பமும் மேன்மையான குணசீலர்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.சில நேரங்களில் அபூர்வமாக அதிசயங்கள் நிகழ்வதும் உண்டு.

ஆமாம் மகாத்மா காந்தியடிகளும் ஒரு அதிசயம் என்றால் அது மிகையாகாது.
அவரை மகாத்மாவாக வளர்த்தது இந்தியாவின் இக்கட்டான அல்லது அவலமான சூழல்தான் என்றால் அதை யாராலும்மறுப்பதிற்கில்லை.
அப்போதிருந்த நமது தேசத்தின் சூழலும் சோதனை வேதனையும் அப்போது அவர் கண்ட அரிச்சந்திர நாடகக் காட்சிகளும் ஒன்றுக்கொன்று இணையாக அவர்தன் கண்முன்னே காட்சிகளாக ஓடி அவரின் சிந்தையை கிளரிவிட்டட்டன.அந்த பாதிப்புகளின் தாக்கம்தான் அவருடைய மனச்சாட்சி அவருக்குள்ளிருந்த மனித நேயத்தை ஞான ஒளியாக வெளிப்படுத்தி உணர்த்தியது. ஒரு சத்திய புருசனான அரிச்சந்திரன் தன் சத்தியத்தைக் காப்பாற்ற எந்த அளவிற்கு அவன்தன் சோதனையின் உச்சத்திற்கே சென்றானோ அந்த அளவிற்கு அண்ணலும் எண்ணற்ற சத்திய சோதனைகளைக் கடந்து நமது நாட்டின் மக்களை அந்நிய ஆதிக்கமெனும் அவலங்களிலிருந்து காப்பாற்றத் துணிந்தார்.அவரைத்துணியச்
செய்ததும் அந்த சத்திய அரிச்சந்திர நாடகமெனும் ஒரு அற்புதச்சூழல்தான் என்றே சரித்திரமும்ஒப்புக் கொண்டுதான் பெருமை அடைகிறது.

சிட்டுக்குருவிகளின் சொந்தக்காரர் எட்டையபுரத்துக்கவிஞர் பாரதியாரிடம் பாடம் பயின்று பாடிப்பறக்கும் ஆயிரக்கான சிட்டுகளில் அடியேனும் ஒருவன் என்று கூறிக்கொள்வதில்தான் கவிஞர்கள் இன்று பெருமை அடைகிறார்கள்.பாரதியாரும் பாரதிக்கு முந்திய வள்ளுவர் ஆகிய மானுடராக அவதரித்த மகான்கள் அனைவருமே அந்தந்தக் காலத்தின் சமூகச்சூழலின் அவசியத் தூண்டலின் தாக்கத்தின் விளைவாகத்தான் அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர் என்பதையும் நாம் புரிந்துகொள்ளமுடிகிறது.நானும் அந்த திசை நோக்கியே வணங்குகிறேன்.

கொ.பெ.பி.அய்யா.



Saturday, 25 April 2015

நான் சுகமே!

நான் சுகமே!

எனக்கு எப்போதும் எந்தப் பிரச்சனையும் பெரிதாக நேர்ந்துவிடுவதில்லை.காரணம் என்னிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் நிறைந்துள்ளதுதான்.நான் மன்னிப்புக்கோரவும்,மன்னிக்கவும் தயங்குவதே இல்லை.எவரிடமும் மன்னிப்புக்கேட்பதாலோ அல்லது எவரையும் மன்னித்துவிடுவதாலோ என்னுடைய தன்மானம் எந்தவிதத்திலும் பாதித்துவிடுவதாக நான் கவலை கொள்வதில்லை.முக்கியமாக சரணாகதி அடையும் மனப்பயிற்சி ஒருவருக்கு இருக்குமானால் அவருக்கு எந்தவிதமான மன உளைச்சலுக்கும் ஆளாக வேண்டிய அவசியமும் நெருக்கடி நிர்பந்தமும் ஏற்பட்டு அவர் சிக்கிக் கொள்ளமாட்டார் என்பதே எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்..பொதுவாக நான் என் மனதை எந்த சூழ்நிலையிலும் இறுக்கமாக வைத்துக்கொள்ளாமல் இயல்பான என்போக்கிலேயே அமைத்துக்கொள்ள என்னுடைய ஆளுமையை நான் நிலைப்படுத்தி வைத்துக்கொள்கிறேன்.மேலும் எந்தவொரு நிலையற்ற புற பொருட்களின் மீதோ ,சொத்துக்களின் மீதோ,சுயசுகங்களின் மீதோ என் மனதை அலைபாயவிடாமல் கட்டுக்குள் வைத்துக்கொள்ள நான் பழகிவிட்டேன்.இன்னொரு கூடுதலான இறைவன் எனக்கு அருளியுள்ள வரம் என்னவென்றால் இந்த நொடிவரை என்பேரில் எந்தவிதமான சொத்துரிமையும் கிடையாது ஓய்வு ஊதியம் பெறும் உரிமை ஒன்றைத் தவிற.அடுத்து விரிவான வெளிப்பழக்கமும் சமூக செல்வாக்கும் அரசியல் தொடர்பும் இல்லை என்பதும் எனது சுகமான அனுபவம்.மேலும்  பிறருக்கு இடையூறாக இல்லாமலும் கூடியமட்டும் உதவும் வாய்ப்போடும் இம்மண்ணில் இருக்கும் வரை வாழவேண்டும் என்பதே எல்லாம் வல்ல இயற்கையிடமும் அதன் செயலான இறைவனிடமும் நான் இறைஞ்சிகின்ற தொடர் விண்ணப்பமாகும்.

கொ.பெ.பி.அய்யா. 

Saturday, 20 September 2014

நான் யார்?

நான் யார் தெரியுமா?

சிலர் பேச்சுவாக்கில் நான் யார் தெரியுமா?என்பாரகள்.ஆனால் அவர்கள் யாரென்று அவர்களுக்கே தெரியாது.அந்த" நான்" என்பது யார்?அதுதான் ஒ்வொருவருக்குள்ளும் அவர்களுக்கே தெரியாமல் ஒளிந்திருக்கும் ஒரு இரகசியம்.அந்த இரகசியத்தை அறிந்துகொள்ளத்தான் நமக்குள் நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டியதாகிறது.
அதற்கு நமது மனதிற்குப் பயிற்சியளிக்க வேணடும்.அதை தியானம் அல்லது ஆழ்ந்த ஆன்மீக சிந்தனையென்றும் சொல்லலாம்.ஒரு அமைதியான சூழலில் நமது ஐம்புலன்களுக்கும் முழுமையான ஓய்வளித்து நமது மனதிற்குமட்டும் பரிபூரணமாக அனுமதியளித்து நமக்குள் அந்த இரகசியத்தைத் தேடவேண்டும்.ஆழ்ந்த சிந்தனைக்குள் நமது மனம் நுழைந்து தேடும் போது எல்லாமே சூன்யமாகத் தோன்றும். .அப்போது இந்த உலகமே தொலைந்துவிட்டது போல் தோன்றும்.நம்மை நாமே இழந்துவிட்டது போன்றும் தோன்றும் .காற்றில் மிதக்கும் மிக இலகுவான ஏதோ ஒன்றிற்குள் நாம் இருந்தும் இல்லாத நிலையில் மனதுமட்டும் அந்த இரகசியத்தைக் கண்டறிந்து கேட்கும். நீ என்பது யார்?அப்போது நமக்கு விடை சொல்லத்தெரியாது.ஏனென்றால் நானென்ற ஒன்று அப்போது இல்லை.இதுதான் இரகசியம்.இதுதாதான் உண்மை. நான் என்பது ஒரு சூன்யம் அல்லது அகங்காரம்.அக அங்காரம் என்றாலே உள்ளுக்குள் ஒன்றுமே இல்லை என்பதுதான் சரியான பொருள். இந்த நிலை எப்போது ஏற்படுகிறதென்றால் எப்போது ஆழ்ந்த சிந்தனையில் நம்மை நாமே தொலைத்துவிடுகிறோமோ அப்போதுதான் நமக்குள் ஏதொ ஒன்று பிரகாசிக்கிறது. அதுதான் தெய்வீக ஞானொளி.அந்த ஞானம்தான் கடவுள்.அனைத்து சுயபோகங்களையும் கடந்து உள்ளிருக்கும் அந்த ஒன்றே ஒன்றுதான் தெய்வீகம்.அதாவது எப்போது நீயே இறைவன் என்ற உண்மையை உணர்கிறாயோ அப்போதே நாம் பெற்றிருக்கும் இந்த உடலானது பொய்யானதுதான் என்பது புரிந்துவிடுகிறது.நமக்குள்ளிருக்கும் தெய்வீகம் எனும் ஆன்மாவிற்கு பெயர் என்பது கிடையாது.உயிரெனும் ஆன்மா நமது உடலில் இருக்கும் வரைதான் நமது உடலுக்குத்தான இந்த உலகம் பெயர் சொல்லிஅழைக்கிறது.
உயிரெனும் ஆன்மா உடலை விட்டு ஓடி விட்டால் பெயரழிந்து பிணம் என்ற பொதுவான பெயர்தான் குப்பையாகிப்போன உடலுக்கு வழங்கப்படுகிறது..அப்பெயரும் அப்பிணம் எரியூட்டப்படும் வரைதான்.அதற்குப்பின் அது சாம்பல்தான்.இந்த உண்மை எல்லோருக்கும் தெரியத்தான் செய்கிறது.ஆனாலும் இந்த உலகத்தின் சாபக்கேடு யாரையும் விட்டு வைப்பதில்லையே.பாவம் !உலகின் மாயைநிலையிலிருந்து தப்புவதென்பது கடினமாகிறது.அதற்கான பயிற்சிகளை பெறுவதற்கும் பொறுமை இழந்துவிடுகிறோம் .பசியெனும் கொடுமையும் பகட்டு எனும் ஆசையும் இவ்வுலக மக்களை மெய்மையை உணரவிடாது கட்டிப்போட்டிருக்கிறது. இம்மயக்கத்திலிருந்து இவ்வுலகமக்களைக் காக்கப் பகவானே நீதான் வந்தாக வேண்டும்.ஓம் நமோ நாறாயண பவ.


கொ.பெ.பி.அய்யா.

Saturday, 8 March 2014

உலகின் தொடக்கம் ஒரு புள்ளி.

உலகம் என்பது ஒரு புள்ளிதான்.

வணக்கம் அன்பர்களே.
இந்த உலகம் ஒரு புள்ளியிலிருந்துதான் விரிந்து பரவியுள்ளது என்பதை இன்னும் கொஞ்சம் விரிவாக ஆராய்வோம்.உலகம் ஒரு புள்ளியிலிருந்துதான் பரவி விரிந்துள்ளது என்பதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் ஆதாரம் இந்த பறந்து விரிந்து கிடக்கும் உலகம் ஒரு ஊருக்கும் மற்றொரு ஊருக்கும் அதுபோல் ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் அல்லது ஒரு கண்டத்திற்கும் மற்றொரு கண்டத்திற்கும் இடையே எந்த ஒரு தகவல் பரிமாற்றங்களும் அல்லது தொடர்பு சாதனங்களும் இல்லாமல் ஒன்றையொன்று கண்டறியாமல் தனித்தனியே பிரிந்து கிடந்த அந்தப் பழமையான தொடக்க காலத்தில் நம்மிடையே பழக்க வழக்கங்கள் ஒன்றுக்கொன்று ஒத்து இருந்துள்ளன என்பதே ஆதாரம் அன்றி வேறொன்றுமில்லை.
மண வாழ்க்கை,குடும்ப அமைப்பு,சமூகப் பிணைப்பு,உணவுப் பழக்க வழக்கங்கள்,ஆடை உடை நாகரிகங்கள்,கட்டிடம் கட்டும் அறிவு,துணி நெய்யும் அறிவு,விவசாய அறிவு சொந்த பந்த உறவுமுறை அறிவு மொழிப் பரிமாறாறம் போன்ற பொதுவான அடிப்படை அறிவுகளை மனிதன் ஒரு இடத்தில் கூடி வாழ்ந்திருக்கும் போதுதானே கற்றிருக்க வேண்டும்.அப்புறம் பரவி வாழ பிரிந்து செல்லும்போது இவ்வறிவுகளையும் அவன் தன்னோடு எடுத்துச்சென்றிருக்க வேண்டும்.என்பதுதானே சரியாகும்.
அதன் பின்பு அவன் பிரிந்து சென்று வாழ்ந்த இடத்தில்.அவனுக்குள் சில புதிய நாகரிக மாற்றங்கள் தோன்றியிருக்கலாம்.மொழிகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.சமூக அமைப்புகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.தொழில் முறையில் புதிய உத்திகள் மற்றும் அவன் உடல் அமைப்பு,போன்றவைகள் அந்த அந்த இடங்களின் பூகோள அமைப்புகளுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் பெற்றிருக்கலாம்.ஆனால் அனைத்துவிதமான மாற்றங்களுக்கும் அடிப்படை அறிவு என்பவற்றை அவன் எங்கோ ஒரு புள்ளியில்தானே கற்றிருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
அறிவியல் சாதனங்கள் கண்டு அறியப்படாத காலத்திலேயே மனிதன் கோள்கள் பற்றி அறிந்து அவைகளுக்குப் பெயர்களும் சூட்டியிருக்கிறான்.பூமி தன்னைத்தானே ஒருமுறை சுழற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் சஞ்சரிக்குமா கால அளவைக் கணக்கிட்டு அதற்கு ஒரு நாளெனவும்.சந்திரன் பூமியை சுற்றி வருகிறது எனவும் அது ஒருமுறை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவை நட்சத்திரங்கள் எனும் மைல் கற்களாகப் பிரித்தும் அதன் பயணக்காலம் ஒரு மாதம் எனவும்.அதன் பகுதிகள் நான்கு வாரங்கள் எனவும்.மற்றும் பன்னிரண்டு தொகுதிகள் ஒரு வருடம் எனவும் அல்லது முன்னூற்று அறுபத்தைந்து நாட்கள் எனவும் அது பூமி ஒருமுறை சூரியனை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால அளவு எனவும் உலகம் முழுவதும் ஒரே விதமாக ஒத்துக்கொண்டது எப்படி?.அதாவது தகவல் மற்றும் தூரப்பயணமாகிய ஆகாயமார்க்கம்,தரைவழி மற்றும் நீர்வழிப் போக்குவரத்து சாதனங்கள் இல்லாத அந்த தொடக்க காலத்தில் இந்தப் பரந்துவிரிந்த உலகத்தில் இந்த நிகழ்வு ஒற்றுமை எவ்வாறு சாத்தியம் என்று நாம் வியக்கும்போதுதான் நாம் ஒரு புள்ளியில், ஒரு தாயில், ஒரு உறவில், ஒரு சொந்தத்தில், ஒரு குடும்பத்தில், ஒரு ஊரில் பிறந்து வாழ்ந்துதான் பின்பு உடமை அல்லது தலைமக் கானச்சண்டை,போர்,மற்றும் யுத்தங்களால் இடம் பெயரவேண்டிய கட்டாய சூழலினால் உந்தப்பட்டு இந்த பரந்துவிரிந்த உலகப் பரப்பில் பரந்து வாழப் போக்குவரத்து சாதனங்களையும் கண்டறிந்து பிரிந்து சிதறியிருக்கிறோம் என்பதுதான் உண்மையிலும் உண்மை.
நமக்குள் உடமை உரிமைகள் அல்லது ஆசை அல்லது தேடல் என்ற ஒரு அறிவு எட்டும் வரை நாம் ஒன்றுகூடி ஒற்றுமையாக ஒரு புள்ளியில்தான் வாழ்ந்திருக்கிறோம் என்பதும் உண்மயாகும்.எப்போது விவசாயம் என்ற ஒரு அறிவைப்பெற்று அதற்கான நில உரிமை உடமைகளை பெருக்கிக்கொள்ளதா தேட முயன்றோமோ அப்போதே நமக்குள் போட்டி பொறாமை மற்றும் மற்றவரை அடக்கி ஆளும் ஆளுமை மேலும் தலைமை முனைவு போன்ற சமூக மாற்றங்கள் அல்லது நெருக்கடிகாளால் நமக்குள் ஒற்றுமைக்குலைவு ஏற்படவேண்டிய நிர்பந்தம் கட்டாயமானது.
அதாவது நமக்குள்ளிருந்த அன்பு சுருங்கி ஆசை விரியத் தொடங்கிய போது இந்த உலகமும் விரியத் தொடங்கியது.மனித இனம் சிதறி வாழ வேண்டிய அவசியம் ஏற்படும் போதுதான் நமக்குள் சமூக அமைப்பு எனும் குழுக்களாகக் கூட்டுறவு வாழ்வியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.அப்போதுதான் குழுக்கள் மற்றும் தொழில் முறைகளால் மொழி,இனம்,சாதி,மதம் போன்ற பிரிவினை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.ஆகவே நமக்குள் நிகழ்ந்த சமூக மாற்றங்களுக்கு அடிப்படைக்காரணம் ஆசைதான் என்றால் அது மிகையாயாகாது,உலகம் முழுவதும் பல்வேறு மக்கள் குழுக்களால் பேசப்படும் பல்லாயிரக் கணக்கான மொழிகள் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்து கிடக்கின்றன என்பதைப் பல ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து நூற்றுக்கணக்கில் கட்டுரைகள் பதிவிட்டுள்ளனர். உதாரணமாக உலகப் பொதுமொழியான ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் இலட்சக்கணக்கில் சொல் ஒற்றுமைகள் உள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது. (உ. ம்)culture -ககலாச்சாரம் , pen-பேனா,mind-மனம், man-மனிதன், rice-அரிசி, இப்படி எவ்வளவோ மொழித்தொடர்புகளை கூறிக்கொண்டே போகலாம். எல்லாவற்றுக்கும் மேலான பூகோள அமைப்பில் கண்டங்களின் இணைப்பைப் பிரித்துச் சிதறி சேரும்விதம் பார்த்து இணைத்துப் பொருத்தினால் ஓன்றியஉலக வடிவம் கிடைக்கும். ஆகவே ஒட்டுமொத்த உலகமும் ஒரு புள்ளியிலிருந்துதான் காலச்சூழலின் இயற்கைத் தாக்கத்தின் மிகப்பெரும் பிரளயத்தால் அல்லது வெடிப்பால் ஓரேபரப்பான உலகப் பூகோள அமைப்பு பல துண்டங்களாக உடைக்கப்பட்டுக் கண்டங்களாக இடம் பெயர்ந்து ஒன்றுக்கொன்றுப் பொருந்தப் பொருந்தி இப்போதைய உலகம் உருவானது என்பதுதான் பூகோள ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து கண்டறிந்த உண்மையிலும் உண்மையா கும்.
கொ.பெ.பி.அய்யா.
  


Friday, 7 March 2014

உலகம் ஒரு புள்ளியில்!

ஒரு புள்ளிதான் உலகம்..........தொடர்ச்சி.

அன்பர்களே நான் எந்த ஒரு நூலையோ அல்லது ஆய்வுக்கட்டுரைகளையோ ஆதாரமாக வைத்துக்கொண்டு இக்கட்டுரையை வரையவில்லை.பொதுவாக என் அனுபவ அறிவுக்கு எட்டியதைத்தான் இங்கே எழுத்து வடிவில்.கூறவிரும்புகிறேன்.எழுதத் தொடங்கும் முன் இன்னொன்றையும் நான் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.என்னைப்பொறுத்து நான் அறிந்தவரை உலகிலேயே எழுத வேண்டும் என ஆர்வப்பட்டு எழுதி அதை உலகுக்கு சொல்லவேண்டும் எனவும் ஆசைப்பட்டு தன் சிந்தையில் உதித்ததை எழுத்தாக்கம் செய்து இதை வெளியிடுங்கள் என்று நம்பிக்கையோடு அதைப்பதியும்போது அதில் எவ்வித் ஆதிக்கமும் செலுத்தாமல் அப்படியே ஏற்றுக்கொண்டு வெளியிடுகிற ஒரே ஒரு ஊடகம் உண்டு என்றால் அது எழுத்து தளம்தான்.உண்மையாகவே இது ஒரு வரப்பிரசாதம்தான்.அந்த வகையில் இத்தளத்திற்கு நன்றி கூறிக்கொண்டு விடயத்திற்கு வருகிறேன்.

இந்த உலகம் எனும் உருண்டையில் முதல் மனித அடையாளம் ஏதோ ஒரு புள்ளியில்தானே தோன்றியிருக்கும்.அப்படி முதலில் தோன்றிய அந்த முதல் அடையாளம் அல்லது படைப்பு அது ஆணாக இருந்திருக்குமா அல்லது பெண்ணாக இருந்திக்குமா..என்ற கேட்கப்படவேண்டிய கேள்வியும் எழுவதும் நியாம்தான்.அதே வேளை இன்னொரு கேள்வி அந்த முதல் அடையாளம் என்ன /எடுத்த எடுப்பிலேயே மனித உருவா அல்லது பரிணாம வளர்ச்சியின் விளைவா?பரிணாமத்தின் தொடக்கம் ஒரு அணுவாக இருந்திருக்கலாம். எனும் அனுமானத்திலும் அது சரியாக இருக்குமானால் முதல் தொடக்கம் ஒரு புள்ளியில்தான் துவங்கியிருக்கிறது.ஆகவே எப்படி எந்தக்கோணத்தில் ஆய்ந்தாலும் ஆரம்பம் என்பது ஒரு புள்ளியாகத்தான் இருந்திருக்கிறது.

அடுத்த கட்டம்.அந்த முதல் மனித உரு பெண்ணா அல்லது ஆணா?அதில்தான் நிறையக் கற்பனைகள் கதைகளாக பேசப்படுகின்றன.அவற்றில் எந்தக்கதையையும் இழுத்துக்கொண்டுவந்து அதாரம் காட்டி புதிதாக ஒரு பிரச்சனையை உருவாக்க விரும்பவில்லை.முதல் மனித உரு எதிலிருந்து வேண்டுமானாலும் பரிணாம வளர்ச்சிப்படி விளந்திருக்கட்டும் அதைப்பற்றியெல்லாம் பேசி அதிகமாக ஆராய்ச்சிகளை நாம் மேற்கொள்ளவேண்டாம்.உலக உயிர்களின் முதற்தோன்றல் என்பது ஒரு புள்ளியில்தான் என்பதை மட்டுமே நாம் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.அந்த முதற்புள்ளி எங்கே எதுவாகத் தோன்றியது. என்பதுமட்டுமே நமக்கு இப்போது தேவையாக இருக்கிறது.அதை நாம் ஏன் தெரிந்து கொள்ளவேண்டும்.அதனால் இப்போது என்னபயன் என்றால். பயன் இல்லாமல் வீணாக இங்கே நம் நேரம் செலவழிக்கப்ப்டவில்லை என்பதையும் புரிந்து கொண்டு தொடருங்கள்.

மனித இனம் முதலில் விளைந்த மண்.அது எதுவாகவும் இருக்கட்டும்.அதன் ஆராய்ச்சி இன்னமும் தொடர்கிறது.அது தொடர்ந்து ஒரு முடிவுக்கு வரும்போது வரட்டும்.ஆகவே அதைவிட முக்கிய.ம்.மனிதம் என்ற அந்த முதற்புள்ளி எது அது ஆணா பெண்ணா/?இதுதான் சிக்கலான இடம்.வினை என்பது தானாக நிகழாது.அதை இயக்க ஒரு சக்தி தேவை.அதே நேரத்தில் ஒரு பொருள் தன் நிலையிலும் சக்தி பெற்றதாகத்தான் உள்ளது என்பதும் அறிவியல் உண்மை.ஒரு பாறாங்கல் ஒரு இடத்தில நிலை பெற்றுள்ளது என்றால் அது அதன் சக்தியால்தான்.அந்த சக்தியின் வினையால்தான் அது இடம் பெயராமல்.அவ்விடத்திலேயே நிலை பெற்றுள்ளது.அந்த சக்தியை வென்று அதை இடம் மாற்ற அதை விடக் கூடுதலான சக்தியைப் பிரயோகிக்கும் போது அதன் இயல்பான சக்தி தோற்று கூடுதல் சக்தியின் வெற்றியில் விளையும் வினையால் கல் இடம் பெயர்கிறது.ஆகவே ஒன்றை இன்னொன்று வெல்லும் போதுதான் வினை நிகழ்கிறது.

ஆகவே எது எதை வென்றது,அப்படியானால் துவக்கம் என்பது இரண்டு புள்ளிகளா?என்று நாம் விளங்கிக்கொள்ள முயலும் போது நிச்சயமாக துவக்கம் என்பது ஒன்றாகத்தான் இருந்திருக்கமுடியும்.அப்புறம் வினைப்படுத்த இன்னொன்றும் தோன்றியிருக்கும்.இதில் முதலில் தோன்றியது ஆண்புள்ளியா பெண்புள்ளியா?நிச்சயமாக அது பெண் புள்ளிதான்..அதை வினைப்படுத்த அப்புறம்தான் ஆண் புள்ளி தோன்றியிருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை.நான் புள்ளி என்று சொல்வது 
ஒரு செல் அதாவது அணு.அதன் பரிணாம வளர்ச்சியின் இறுதி விளைவுதான் மனித வடிவம்.இந்த நிகழ்வுகள் முதலில் நிகழ்ந்த இடமும் ஒரு புள்ளிதான்.அந்த முதற்புள்ளியில் தொடங்கித்தான் உலகம் விரிந்தது.அதாவது மனித இனம் பரவி வாழத் துவங்கியது என்பதற்கு முதலில் உலக மொழிகளில் பேசப்படும் சில சொற்களின் ஒற்றுமை.மற்றும் ஒலிஒற்றுமை.

அ எனும் ஒலி ஒற்றுமை.அதில் தொடங்கும் அத்தனை ஒலிகளும்  பொதுவாகத்தான் உள்ளன.எழுத்துக்கள்தான் வேறுபடுகின்றன.அதுபோல் ஒன்று.---one,இரண்(டு)-டூtwo,த்ரீ சூலம்,த்ரிமூர்த்தி ---- three
அதுபோல் அனைத்து உலக நாட்கணக்கும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன..உலகத்தில்  பொதுவாகவே வாரத்தின் நாட்கள் ஏழு மாததின்நாட்கள் முப்பது..வருடத்தத்தின் நாட்கள் முன்னூற்று அறுபத்தைந்து.நவகிரகம் ஒன்பது.தமிழில் ஞாயிறு என்றால் சூரிய,ன் ஆங்கிலத்தில் sunday(sun+day) திங்கள் என்பது சந்திரன்.ஆங்கிலத்தில் mo(o)nday, இப்படி பல ஆதாரங்கள். உலகம் முழுவதும் தேடலாம்.

தொடரும்
கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 5 March 2014

பெண்ணடிமை ஒழிப்போம்.

பெண்ணடிமை ஒழிப்போம்!

நாம் மனதார பெண்ணடிமைத்தனம் ஒழிய வேண்டுமென எண்ணுகிறோமோ?என நமக்குள் நாமே முதலில் சுய பரிசோதனை செய்து கொள்வதும் அவசியமாகிறது.ஏனெனில் சிலர் பெண்ணடிமைத்தனம் பற்றி வாய்கிழியப் பேசுவார்கள்.ஆனால் செயல்முறை என்று வரும்போது தயங்குவார்கள்.ஊருக்குத்தான் உபதேசம் என்பதுபோல்தான் அவர்கள் செயல்பாடுகளிருக்கும்.அப்படித்தான்இன்னும் சிலர் பொய்யாக வாழ்ந்துகொண்டும் வீண் பேச்சுப் பேசிக்கொண்டும் ஊரையும் உலகத்தையும் ஏமாற்றிக்கொண்டும் திரிகிறார்கள்.

“பெண்களுக்கு சுயமரியாதை உரிமை கொடுத்தால் அவர்கள் தலையில் ஏறி அமர்ந்துகொண்டு மொளகாய் அரைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.அப்புறம் நம்முடைய சுயமரியாதை கேள்விக்குறியாகிவிடும்.அவர்களை ஒருபடி இறக்கியே வைத்துக்கொள்ளவேண்டும்”என வீணாக அஞ்சி வியாக்கியாணம்பேசுவோர்கள்தான் எல்லா ஆண்களும் என்று நான் அடித்துத் தைரியம்மாகச்சொல்வேன்.ஆகவே நிதர்சனமான பெண்ணுரிமைக்கு இன்னும் நாம் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.பெண் விடுதலை என்பது ஓரளவிற்கு ஒரு மெல்லிய வெளிச்சம்தான் தெரிகிறது.அதற்காக உழைத்த பாரதியார் மற்றும் பெரியார் போன்ற மகான்களை போற்றவேண்டும்.

இன்னமும் முழுமையான பெண்ணுரிமை நாம் அடையவேண்டுமானால் பெண்களின் ஒட்டுமொத்தமான எழுச்சியும் துணிச்சலும் தூண்டப்படவேண்டும்.பெண்களின் பரிபூரண ஆதரவு இல்லாமல் இம்முயற்சி வெற்றி அடைவது சிரமம் என்பதே என்னுடைய ஆதங்கம்.இனியும் ஆணினத்தை நம்புவது சாத்தியம் இல்லை.இன்னொன்றும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இதற்கு எதிராக இருப்பவர்கள் ஆணினம் மட்டுமல்ல.பெண்களே பெண்ணினத்திற்கு எதிராக இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது.ஆண்களின் துணை இல்லாமல் பெண்களால் தனித்து இயங்க முடியாது என்ற அச்சத்தில்தான் இன்னமும் பெண்கள் இருந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஆணாதிக்கம் கொண்டவர்கள் அப்படித்தான் இச்சமுதாயத்தின் கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.ஆண்களுக்குச் சாதகமாகவே சாத்திர சம்பிரதாயங்களின் வடிவமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.மனித சமுதாயம் தோன்றிய காலத்தில் திருமண அமைப்பு என்பது இல்லாத காலத்தில் யாரும் யாரோடும் உறவு கொள்ளலாம் எனும் பாமரத்தனமான காலத்தில் பிறந்த குழந்தைகள் தாயின் அரவணைப்பில்தான் பாதுகாக்கப்பட வேண்டிய சூழலில் பெண்களே குடும்பத் தலைமைப் பொறுப்பில் இருந்துள்ள நிலையில் ஆண்கள் பொறுப்பற்றவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

அதன் கட்டாயத்தில்தான் பெண்களின் பாதுகாப்புக்கருதி திருமணம் எனும் ஒரு பிணைப்பை ஏற்படுத்தி குடும்பம் என்ற ஒரு ஒழுக்கமான வாழ்வு எனும் நாககரிகத்தின் முதல் படியில் மனித இனம் தன் காலடியை எடுத்து வைக்கத் தொடங்கியது.

அதன் பின்புதான் குகையில் வாழ்ந்த மந்தை வாழ்க்கை தனித்தனி மண்வீடுகளைக்கட்டி குடும்பங்களாக வாழத் தெரிந்து கொண்டு அவரவர் வசதிவாய்ப்புக்களை ஒவ்வொன்றாகத் தேடிக்கொள்ளும் முயற்சியில் தகவல் பரிமாற்றத்திற்கு உதவியாக ஒலிகளை அடையாளமாக்கி மொழிகளை உருவாக்கினர்.பின்பு நெருப்பின்னைக்கண்டுபிடித்து மேலும் தன் நாகரிக முன்னேற்றத்தில் புதுப்புது உணவுப்பழக்கங்களில் மனிதன் மேம்பட்டான்.விவசாயம் செய்யவும் கற்றுக்கொள்ளும்போதுதான் உடமை உரிமை எனும் பிரச்சனைகள் எழுகின்றன.வலிமை உள்ளவன் உடமையில் உயர்கிறான்.வலிமை எனும் பாதுகாப்பு அவசியம் தோன்றும்போதுதான் ஆணாதிக்கம் தலை தூக்குகிறது.இந்த இடத்தில இயற்கை செய்த சதியினால்தான் ஆணாதிக்கம் வலிமை பெறுகிறது.அங்கே பெண்ணினம் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

பின்பு வலிமையுள்ளவவன் நிலை பெறவும்.மெலிந்தவன் இடம்பெயரவும் வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.அதனால் இடம்விட்டுஇடம் ஊர்ந்து வசதி வாய்ப்புக்களை ஆய்ந்து கூட்டமாகவும் குழுக்களாகவும் குடும்பங்களாகவும் அமையும்போது சமுதாயக் கட்டமைப்பு உருவாகிறது.அப்போது ஆணாதிக்கம் வலிமை பெற்று தனக்குச்சாதகமாகவே சில ஒழுக்க விதிகளை உருவாக்கிக்கொள்ள முயல்கிறது.ஊர்ந்து வந்த இடம் ஒரு தலைமையில் ஊராக விரிகிறது.வலிமையுள்ள ஆணே தலைவனாகிறான்.மேலும் ஆணாதிக்கம் வலிமை பெறுகிறது.ஆகவே அன்று தொடங்கிய ஆணாதிக்கம் இன்றும் பெண்ணினத்தை அடக்கித்தான் ஆண்டுகொண்டிருக்கிறது.

வெளியுலகம் கண்டு விழித்துக்கொள்ளக்கூடாது என்பதில் ஆண்கள் மிகவும் கவனம் பார்த்துக்கொண்டார்கள்.கல்வி மறுக்கப்பட்டது.சுயமரியாதை உரிமை பறிக்கப்பட்டு பெண்கள் வெறும் பிள்ளைப்பேறு எந்திரங்களாக வீட்டுக்குள்ளேயே ஒடுக்கப்பட்டு பூட்டி வைக்கப்பட்டு.மணம்முடிக்கப்பட்டபின் பெண் என்பவள் ஒரு ஆணின் நிழலில்தான் வாழ வேண்டும் என்ற காட்டாயத்தையும் வேதமாக்கினார்கள்.

இந்த இடம்தான் பெண்ணுரிமைக்கு எமனாகி எடுக்கும் முயற்சிகளையெல்லாம் காவு வாங்கிக்கொண்டிருக்கிறது.அப்படியானால் அதற்கு ஒரே வழி என்ன என்று ஆராயும்போது எனக்கு ஒரு உள்ட்டா வழி ஒன்றுதான் உதயமாகிறது.

ஆமாம் பெண் கட்டிக்கொடுக்கப்படுகிறாள் என்ற சொல் ஒழிக்கப்படவேண்டும்.பெண்ணுக்குப் புகுந்தவீடு என்பது இடம் மாறி இனி பிறந்தவீடே சொந்த வீடு என்ற நிலை வரவேண்டும்.இனி ஆண்தான் பெண் வீட்டிற்கு இடம் பெயர வேண்டும்.பெண் ஆணின் வீட்டில் என்ற நிலைமாறி ஆண் பெண்ணின் வீட்டில் என்றாகவேண்டும்.திருமணச்சடங்குகள் பெண்ணின் வீட்டில்தான் நடைபெற வேண்டும்.இனி ஆண்வாரிசு என்றில்லாமல் பெண்வாரிசு என்று உரிமைநிலை மாற்றப்படவேண்டும்.அவ்வாறு நிலைமை மாறும்போது மாமியார் கொடுமை என்ற இம்சைக்கோ கணவனின் பாலியல் சித்ரவதை என்ற வன்முறைக்கோ வரதட்சனை என்ற கட்டாயப் பணம் பறிப்புக்கோ அங்கே வேலை இருக்காது.இதை விட்டால் பெண்ணுரிமை மீள வேறு மார்க்கம் இல்லவே இல்லையென உறுதிப்படச்சொல்லலாம்.இது வெறும் பேச்சல்ல இதன் வரைவு மசோதா தாக்கலாகி.விரைவில் சட்டமாக்கினால் ஆச்சர்யப்படுவதற்கில்ல.

இனி திருமண வீட்டில்
“மண மகளே மருமகளே  வா வா !”      என்ற பாட்டுக்குப்பதில்
“மண மகனே மருமகனே வா வா”  என்ற பாட்டுத்தான் முழங்க வேண்டும்.
இப்படி நிலைமை தலை கீழாக மாறினால் ஒழிய பெண்ணுரிமை என்பது வெறும் வெட்டிப்பேச்சாக மாட்டுமே பேசப்பட்டு வரும்.
பெண்ணுரிமை அல்லது பெண் விடுதலை என்ற இலக்கை ஒருநாளும் எட்ட இயலவே இயலாது என்பதே திண்ணம்..

 கொ.பெ.பிச்சையா.

Tuesday, 18 February 2014

யார் மனிதன்?

யார் மனிதன்?
மனதன்தான் மனிதன்.

 மனிதன்என்றால்என்ன?மனிதனுக்கும்மற்ற விலங்கினங்களுக்
கும் என்ன வேற்றுமை என்று பலரும் பல்வேறு கோணங்களில்
ஆராயந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.என்றாலும் நம்முடைய அனுபவத்தில் மனிதனை மற்ற
உயிரினங்களோடு ஒப்பபிட்டுப்பார்க்கையில் வெளிப்ப்படையாகவே ஓர் உண்மையை புரிந்து கொள்ள முடிகிறது.

 நாம் வாழ்வதற்குத் தேவைப்பபடும்
தேவைகளை நமது அனுபவங்கள் நமக்குக்கற்றுத்தந்துள்ளன.
அப்படிப்பினைகள் நல்லது கெட்டது,தூயது---தீயது,வேண்டுவது--- வேண்டாதது எனப்பிரித்தறியும் திறன் தந்துள்ளன.அந்தத்திறனால் உகந்தனவற்றைத் தெளிந்து தெரிவு செய்யவும் மனிதனால் மட்டுமேமுடிகிறது

தேர்ந்தனவற்றைத் தேர்ந்து நமது
தேர்ச்சிக்கு ஏற்பநமக்குள் உணவு,மொழி,உடை,குடியிருப்பு,விவசாயம்,தொழில் எனப்பல கலாச்
சாரஙள் உருவாகிட நமது பட்டறிவுகளே அடிப்படையாக இருந்துள்ள
மனிதஇனத்தின் வாழ்க்கை ஒழுங்குமுறை வணக்கம் செய்யப்படவும்,
சீரமைக்கப் படவும்  மனிதனுக்குள் 
மட்டும் ஒர் அதிசயக் கருவி உதவி வந்துள்ளது..அந்த  அரிய பொருள் 
மனித இனத்திற்கு  மட்டுமே 
இறைவனால் வழங்கப்பட்டுள்ளது.அப்பொருள்தான் மக்களை 
மாக்களிடமிருந்து வேறுபடுத்தி உயர்த்தியதுஅது எது?அதுதான்  மனம் எனும் அற்புதக் கருவி.மனம் என்பது மனிதனுக்கு மட்டுமே 
இறைவனால் அருளப்பட்டு உள்ளது..மனம் கொடுக்கப்
பட்டுள்ளதால்தான் மனதனென்றும் பின்மனிதன் என்றும் பெயர் மாற்றம் பெற்றான்.மனம் என்பதற்கு பல பொருள்கள் உண்டு.
அவைஆறாம் அறிவு,பகுத்தறிவு,
சுயஅறிவு,சிந்தை மற்றும் சிந்தனை 
எனப் பல பெயர்களில் ஒரு பொருளாக 
விளங்குகிறது  .
.அவ்வாறான அந்த உன்னத அற்புதப் பொருளைஇறைவனுக்கே அற்பணித்து இறைவனுக்குப் 
பிடித்தமான அல்லது அவன் படைப்புகளைப் போற்றிக் காப்பதுமான நற்
பணிகளைச் செய்வோம்.
அதுவே மெய்யான திருப்பணிகளாகும்.
        நல்லதே சிந்திப்போம்.நல்லதே 
செய்வோம்.மனம் என்னும் மனச்சாட்சி கூறும் நியாயங்களைக் கேட்போம்.
உலகம் தூய்மைப்பட உற்றத்
துணையாக இருப்போம்.மனித இனம் 
மற்றும் உயிர்கள்
அனைத்தும் நலமாக வாழ மனதன்தான் மனிதனென வாழ்ந்து வையகம் வாழ வாழ்வோமாக.
கொ.பெ.பி.அய்யா.