யார் மனிதன்?
மனதன்தான் மனிதன்.
மனிதன்என்றால்என்ன?மனிதனுக்கும்மற்ற விலங்கினங்களுக்
கும் என்ன வேற்றுமை என்று பலரும் பல்வேறு கோணங்களில்
ஆராயந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.என்றாலும் நம்முடைய அனுபவத்தில் மனிதனை மற்ற
உயிரினங்களோடு ஒப்பபிட்டுப்பார்க்கையில் வெளிப்ப்படையாகவே ஓர் உண்மையை புரிந்து கொள்ள முடிகிறது.
நாம் வாழ்வதற்குத் தேவைப்பபடும்
தேவைகளை நமது அனுபவங்கள் நமக்குக்கற்றுத்தந்துள்ளன.
அப்படிப்பினைகள் நல்லது கெட்டது,தூயது---தீயது,வேண்டுவது--- வேண்டாதது எனப்பிரித்தறியும் திறன் தந்துள்ளன.அந்தத்திறனால் உகந்தனவற்றைத் தெளிந்து தெரிவு செய்யவும் மனிதனால் மட்டுமேமுடிகிறது
தேர்ந்தனவற்றைத் தேர்ந்து நமது
தேர்ச்சிக்கு ஏற்பநமக்குள் உணவு,மொழி,உடை,குடியிருப்பு,விவசாயம்,தொழில் எனப்பல கலாச்
சாரஙள் உருவாகிட நமது பட்டறிவுகளே அடிப்படையாக இருந்துள்ள
மனிதஇனத்தின் வாழ்க்கை ஒழுங்குமுறை வணக்கம் செய்யப்படவும்,
சீரமைக்கப் படவும் மனிதனுக்குள்
மட்டும் ஒர் அதிசயக் கருவி உதவி வந்துள்ளது..அந்த அரிய பொருள்
மனித இனத்திற்கு மட்டுமே
இறைவனால் வழங்கப்பட்டுள்ளது.அப்பொருள்தான் மக்களை
மாக்களிடமிருந்து வேறுபடுத்தி உயர்த்தியது. அது எது?அதுதான் மனம் எனும் அற்புதக் கருவி.மனம் என்பது மனிதனுக்கு மட்டுமே
இறைவனால் அருளப்பட்டு உள்ளது..மனம் கொடுக்கப்
பட்டுள்ளதால்தான் மனதனென்றும் பின்மனிதன் என்றும் பெயர் மாற்றம் பெற்றான்.மனம் என்பதற்கு பல பொருள்கள் உண்டு.
அவைஆறாம் அறிவு,பகுத்தறிவு,
சுயஅறிவு,சிந்தை மற்றும் சிந்தனை
எனப் பல பெயர்களில் ஒரு பொருளாக
விளங்குகிறது .
.அவ்வாறான அந்த உன்னத அற்புதப் பொருளைஇறைவனுக்கே அற்பணித்து இறைவனுக்குப்
பிடித்தமான அல்லது அவன் படைப்புகளைப் போற்றிக் காப்பதுமான நற்
பணிகளைச் செய்வோம்.
அதுவே மெய்யான திருப்பணிகளாகும்.
நல்லதே சிந்திப்போம்.நல்லதே
செய்வோம்.மனம் என்னும் மனச்சாட்சி கூறும் நியாயங்களைக் கேட்போம்.
உலகம் தூய்மைப்பட உற்றத்
துணையாக இருப்போம்.மனித இனம்
மற்றும் உயிர்கள்
அனைத்தும் நலமாக வாழ மனதன்தான் மனிதனென வாழ்ந்து வையகம் வாழ வாழ்வோமாக.
கொ.பெ.பி.அய்யா.